உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, October 15, 2009

சின்னவிருது நம்மைச் சிறைப்படுத்துகிறதா...?


உலகம் சுற்றும் வாலிபன் என்ற பெயரில் நோபல் விருது மாதிரி பதிவர் நாஞ்சில் பிரதாப் எனது சுற்றுலா பதிவுகளை படித்துவிட்டு விருது கொடுத்துள்ளார்.
அண்ணாருக்கு நன்றி.

(0)

சென்றுவந்த நாடுகளை பார்த்தஇடங்களை பதிவிடுவதால் பலருக்கு அல்லது சிலருக்கு பிரயோஞனமாக இருக்கலாம் . அப்படி சிலருக்கு அவசியமேற்பட்டு
சிலர் தொலைபேசியிலும் சிலர் மின்னஞ்சலிலும் பயணத்தின் சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டார்கள்.
பிறருக்கு பிரயோஞனம் என்றபோதிலும் சுற்றிவந்தவர்களுக்கு தங்களின் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் அலாதி இருக்கிறது. இப்படி பகிர்வதற்காக வேண்டி சுற்றிய சில பத்திரிக்கையாளர்களின் பயணக்கட்டுரையை நான் படித்திருக்கிறேன் அதனுடைய தாக்கமாகவும் கூட இருக்கலாம்.
நான் இங்கு பதிவுப்போடுவதற்காக சுற்றியதில்லை இனி அப்படி சுற்றினாலும் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

(0)

எழுதிய பயணக்கட்டுரையில் பல ஆங்கில வார்த்தைகளை பிரயோகித்துள்ளேன். காலப்போக்கில் அதைதவிர்த்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.
ஒரு பதிவைபதிவிடும் போது பலரும் வந்து படிப்பார்கள் பின்னூட்டமிடுவார்கள் என்று நம்பி ஏமாறக்கூடாது என்ற அனுபவத்தை பதிவுலகம் எனக்கு கற்று தந்திருக்கிறது.
பலருடைய பதிவுக்கு சென்றாலும் செல்லக்கூடிய அனைத்து பதிவுகளையும் படித்துவிடுவதுமல்ல அதற்கு பின்னூட்டமிடுவதுமல்ல. படிக்கும் அந்த தருணத்தில் படிப்பவரின் மனோநிலை எழுதியவரின் எளிமையான விளங்கவைத்தல் சுவாரஸ்யம் நடை இதைப் பொருத்தே மற்றவரின் படித்தலும் பின்னூட்டமும் அமைகிறது.
சிலருடைய பதிவுகளை படிக்கும்போது விளங்குவதில்லை என்றால் அதற்கு வாசிப்பாளருக்கு பயிற்சி தேவைப்படுகிறது என்பதை வலையுலகத்தில் புரிந்துக் கொள்ளமுடிகிறது.

(0)

பலதரப்பட்ட விருதுகளை ஒருவருக்கொருவர் பதிவுலகில் பகிர்ந்துக் கொள்கிறார்கள். இந்த விருதுகளை யார் வழங்குகிறார்கள் என்று ஆரம்பத்தில் எனக்கு விளங்கவில்லை. பலருடைய பதிவுகளில் விருதுகளை பதித்து அதன் கீழ் கொடுத்தவரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்கள் அதைப்பார்த்த மாத்திரத்தில் புரிந்துக்கொள்ள முடிந்தது.
தமிழ்மணம், தமிழீஸ், தமிழ்10, திரட்டி போன்றவர்கள் நட்சத்திர பதிவர்களை தேர்வு செய்து உற்சாகப்படுத்துகிறார்கள் விருதும் கொடுக்கிறார்கள். இவைகளில் இடம் பெறுவதற்கு அளவுகோள் வைத்திருப்பார்கள். அதற்கு தகுதியானால் நாம் நட்சத்திரமாகலாம். அந்த அளவுகோல் என்ன என்பதை விவரித்தால் பலரும் அதற்கு தகுதியினை வளர்த்துக் கொள்வார்கள் .
நாம் நம்மைபட்டைத்தீட்டிக் கொள்வதற்கு உற்சாகங்களை வழங்கி பல உள்ளங்கள் நமக்கு உரமேற்றுகிறார்கள்.

(0)

கருத்துபறிமாற்றங்களில் குழாயடிச்சண்டைகள் நடப்பதையும் பார்க்கமுடிகிறது.
வலைப்பூ என்பது நம் வீட்டு தோட்டத்தைப்போல் . ஒவ்வொருவரும் அவர்களின் விருப்பத்திற்கு செடிகளை வளர்ப்பார்கள் அதில் விளையும் களைகளை சுட்டிக்காட்டலாம் தவறில்லை ஆனால் அந்த செடிகளை பிடுங்கி எறிய நினைப்பது தவறு.
பதிவுலகில் இதைத்தான் எழுதவேண்டுமென்கிற நிர்பந்தம் ஏதுமில்லை. நினைத்ததை படித்ததை அனுபவங்களை இப்படி எதையும் எழுதலாம் என்ற சுதந்திரம்தான் என்னைப்போன்ற பலஆயிரம் பதிவர்களை இணையதளம் சுமந்துக் கொண்டிருக்கிறது.

(0)

நீங்க என்னச்சொல்லவர்றீங்க என நீங்க கேட்பது எனக்கு புரிகிறது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டிங்கிற மாதிரி நாஞ்சில் பிரதாப் தந்த விருது இதை எழுதவைத்துவிட்டது.
இப்படி சின்ன சின்ன விருதுகள் நம்மை மென்மேலும் எழுதத் தூண்டுகிறது .அது சிறையா.? அல்லது சுதந்திரமா.? என்று பட்டிமன்றம் நடத்துவதைவிட அது சந்தோசப்படுத்துகிறது என்பதால் பல பதிவர்களை நாம் சந்தோசப்படுத்தலாம்தானே…வாங்க சந்தோசப்படுத்துவோம்.!

9 comments:

Prathap Kumar S. said...

இஸ்மத் அண்ணே...

முதலில் ஒரு விசயம், எனக்கு இப்படி புதுபுது இடங்களுக்கு செல்வதும் மிகவும் பிடித்த விசயம். போகாவிட்டால் போனவர்களின் அனுபவத்தைக்கேட்பது, அதைப்பற்றி எழுதியதை படிப்பதில் ஆர்வம் உண்டு.
நான் உங்கள் எல்லா சுற்றுலா பதிவுகளையும் படித்திருக்கிறேன். அதிகமாக யாரும் பின்னூட்டம் இடாததையும் கவனித்திருக்கிறேன்.

இதனால் ஒரு வேளை நீங்கள் உற்காசம் இழந்து எதிர்காலத்தில் இதுபோன்ற அனுபவங்களை பகிராமல் போய்விடுவீர்களோ என்றுதான் ஒரு விருதை நான் தந்தேன். அது உங்களை இந்த அளவிற்கு யோசிக்கவைக்கும் என்று நினைக்கவில்லை. அந்த விருதை உங்களுடன் வைத்திருப்பதும், தூக்கி எறிவதும் உங்கள் விருப்பமே...எதுவும் கட்டாயம் கிடையாது.
தவறிருந்தால் மன்னிக்கவும்.

உங்கள் அடுத்து சுற்றுலா பதிவை எதிர்பார்க்கும் ஒரு சகபதிவன்.
நாஞ்சில் பிரதாப்

அது ஒரு கனாக் காலம் said...

ரொம்ப நல்லா இருக்கு சார் . உங்கள் பயணக் கட்டுரை எல்லாமே, ... எனக்கும் நான் பார்த்த இடங்களை எழுதுவது ரொம்ப பிடிக்கும் , தனியாக போவதை விட நண்பர்களை கூட்டிக் கொண்டு போவது இன்னும் பிடிக்கும் ... எழுதுங்க சார், எழுதுவதற்காக நிறைய இடங்களை பாருங்க சார்

சென்ஷி said...

வாழ்த்துக்கள் இஸ்மத்ஜி! உங்களுடைய எழுத்துக்களின் மூலம் நாங்கள் நீங்கள் கண்டு ரசித்த இடங்களின் சிறப்பை படித்து மகிழ்கிறோம். நிச்சயம் இந்த விருதுக்கு நீங்கள் தகுதியானவரே!

கிளியனூர் இஸ்மத் said...

நாஞ்சில் அவர்களுக்கு ,
நான் ஏதும் தவறா எழுதியிருப்பதாக எண்ணுகிறீர்களா...? இதுபோன்ற விருதுகளை கொடுக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தானே எழுதி உள்ளேன்.....இதுமாதிரி விருதுகள் சந்தோசத்தை கொடுப்பதாகத்தானே எழுதிஉள்ளேன்....நீங்க தவறாக விளங்கிக்கொண்டிர்களா...? விபரம்

//இஸ்மத் அண்ணே... நான் தவறாகத்தான் புரிந்துக்கொண்டேன் என்றுதான் நினைக்கிறேன்... மீண்டும் ஒருமுறை உங்கள் பதிவை வாசித்தபோது உங்கள் கருத்து புரிந்தது. மன்னிக்கவும்.. மேன் மேலும் இதுபோன்ற விருதுகளைப்பெற வாழ்த்துக்கள்.

ஒரு பதிவருக்கு பின்னூட்டம் கிடைத்தாலே அது பெரியவிசயம். அதிலும் யாராவது அவார்டு கொடுக்கும்போது கொடுப்பது யாராக இருந்தாலும் அவார்டு மிகச்சின்னதாக இருந்தாலும் அது கண்டிப்பாக சந்தோசத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். கண்டிப்பாக நாம் தகுதியுள்ளவர்களுக்கு இந்த மாதிரி சிறிய அவார்டுகளை கொடுத்து உற்சாகப்படுத்தவேண்டும்.

நான் ஏதாவது தவறாக பின்னூட்டமிட்டிருந்தால் மன்னிக்கவும்.

அடுத்த பதிவு எந்தநாடு? எப்போ? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//

Prathap Kumar S. said...

இஸ்மத் அண்ணே... நான் தவறாகத்தான் புரிந்துக்கொண்டேன் என்றுதான் நினைக்கிறேன்... மீண்டும் ஒருமுறை உங்கள் பதிவை வாசித்தபோது உங்கள் கருத்து புரிந்தது. மன்னிக்கவும்.. மேன் மேலும் இதுபோன்ற விருதுகளைப்பெற வாழ்த்துக்கள்.

ஒரு பதிவருக்கு பின்னூட்டம் கிடைத்தாலே அது பெரியவிசயம். அதிலும் யாராவது அவார்டு கொடுக்கும்போது கொடுப்பது யாராக இருந்தாலும் அவார்டு மிகச்சின்னதாக இருந்தாலும் அது கண்டிப்பாக சந்தோசத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். கண்டிப்பாக நாம் தகுதியுள்ளவர்களுக்கு இந்த மாதிரி சிறிய அவார்டுகளை கொடுத்து உற்சாகப்படுத்தவேண்டும்.

நான் ஏதாவது தவறாக பின்னூட்டமிட்டிருந்தால் மன்னிக்கவும்.

அடுத்த பதிவு எந்தநாடு? எப்போ? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Barari said...

sakotharar ismath neengal nambi kondirukkum maarkka visayangalil naan mutrilum matru karuththu kondavan.aanaal ungal payana katturaikalai vehuvaaka rasikkiren.payana katturaikalukkaaka nitchayam ungalukku viruthu vazangalaam.vazthukal.

கிளியனூர் இஸ்மத் said...

அன்பு சகோதரர் பராரி உங்கள் வருகைக்கு நன்றி....கருத்துவேறுபாடு என்பது ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட சுதந்திரம்...இது அவரவர்களின் நம்பிக்கையிலும் புரிதலிலும் தெளிதலிலும் இருக்கிறது....அதையெல்லாம் ஒரங்கட்டி பயணக்கட்டுரையை படித்து வாழ்த்துச்சொன்ன நீங்கள் நல்ல மனிதர்...வாழ்த்துக்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இஸ்மத் அண்ணே.. உங்கள் பயணக்கட்டுரைகளை ரசித்து படித்தவர்களுள் நானும் ஒருவன். தொடர்ந்து எழுதுங்கள். அதற்கு இது போல சின்ன சின்ன ஊக்குவிப்புகள் உதவும் :)

துபாய் ராஜா said...

வாங்கிய விருதிற்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி.

//இப்படி சின்ன சின்ன விருதுகள் நம்மை மென்மேலும் எழுதத் தூண்டுகிறது .அது சிறையா.? அல்லது சுதந்திரமா.? என்று பட்டிமன்றம் நடத்துவதைவிட அது சந்தோசப்படுத்துகிறது என்பதால் பல பதிவர்களை நாம் சந்தோசப்படுத்தலாம்தானே…வாங்க சந்தோசப்படுத்துவோம்.! //

வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறேன்.

பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....