உங்கள் வருகைக்கு நன்றி...

Thursday, December 3, 2009

ஈத்பெருநாள் கொண்டாட்டங்கள்....

அதிகாலை ஈத் பெருநாளின் இறைவணக்கத்தை நிறைவு செய்து முசுந்தத்தை நோக்கி படையெடுத்தோம்.
ஐந்தரை பெட்டியாய் ஐந்து குடும்பங்கள் அணிவகுத்தோம்.

தமிழ்பண்பாட்டுக் கழகத் தலைவர் (முன்னால் அமைப்பு) குத்தாலம் அசரப்அலி
ஈமான் அமைப்பின் தணிக்கையாளர் முஹம்மது பாருக்
புளு ஸ்டார் ஸ்டேஸ்னரியின் மேளாளர் அப்துல் முனாப்
யுனைடெட் பேங் சார்ஜா கிளையின் மேளாளர் முஹம்மது சபீர்
இவர்களுடன் நான் ........





இதோ வந்துக்கொண்டிருக்கிறது பிரியாணி சட்டி...
தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வருபவர்கள் முஹம்மது பாருக் அண்ணனும், அப்துல் முனாப் அண்ணன்.


உண்பதற்கு தயாராக அமர்ந்திருக்கும் பசிகள்...

கசப் ஹோட்டல்


சாவிய வாங்கிட்டு வந்து ரூமை திறந்ததுமே இடத்தை பிடித்த பெரிய மலையும் சின்ன மலையும்....





போட்டில் குட்டீஸ்களின் ஆட்டம்

இவ்வளவு பவ்யமாக கையை கட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் குத்தாலம் அசரப்அலி அண்ணன் அருகில் யார் இருந்திருப்பார்.....

முசுந்தத்தில் இரவு தங்கிவிட்டு காலையில் போட்டிங் ஹவுஸ் சென்று பேரம்பேசி ஒருநாள் வாடகைக்கு போட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கடலில் மிதந்தோம். உணவுகள் நேரத்திற்கு சரியாக கொண்டு வந்து கடலிலேயே தருகிறார்கள். எங்கு திரும்பினாலும் மலைகள் நடுவில் கடல் அலைகள்.
உற்சாகத்துடன் நடுக்கலில் வாழ்க்கை ஜாக்கெட்டை அணிந்துக் கொண்டு முனாப் சபிர் குளித்தார்கள்.
குழந்தைகளின் கொண்டாட்டம் பெற்றோர்களின் மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.
பாருக் அண்ணனின் குடும்ப அன்யோன்யம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
குத்தாலம் அசரப்அலி அண்ணனின் அட்டகாசங்கள் அதிரடி சிரிப்பு மழையை உண்டாக்கியது.
மொத்தத்தில் ஈத்பெருநாளின் கொண்டாட்டங்கள் சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கொண்டாட்டமாகவே அமைந்தது.

கூட்டு குடும்பம் என்பது இந்த காலத்தில் பலருக்கு கசப்பாக இருக்கிறது. ஆனால் கூட்டாக சேர்ந்து சுற்றுலா செல்லும் போது கிடைக்கும் மகிழ்ச்சி இனிப்பாக இருக்கிறது.

4 comments:

Prathap Kumar S. said...

ஈத் முபாரக் அண்ணே...
நல்ல என்ஜாய் பண்ணிருக்கீங்க போல....

விருதுகளை வாங்கி குவிச்சுட்டீங்க...ஹீஹீஹீ வாழ்த்துக்கள்...

cheena (சீனா) said...

அன்பின் கிஸ்மத்

தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்

சுற்றுலா என்றாலே மகிழ்ச்சி தானே = அதுவும் ம்ழலைச் செல்வங்களுடன் குடும்பத்தினருடன் கூட்டுச் சுற்றுலா எனில் கேட்கவும் வேண்டுமோ

நல்வாழ்த்துகள்

Anonymous said...

ஈத் முபாரக் சார்!
நீங்க போற இடமெல்லாம் பெரிய பிரியாணி பாத்திரத்தோட போயிடறீங்க போல இருக்கே? :) இப்படி ஒரு குழுவா குடும்பத்தோட போய் கொண்டாடறதே ஒரு சுகம். வாழ்த்துகள்!

கிளியனூர் இஸ்மத் said...

நாஞ்சில் பிரதாப் சீனா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

நம்முடைய ஸ்பெஷலே பிரியாணிதானுங்க....அதை விட்டுட்டு தனியாபோக முடியுமா...அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்..

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....