இரவு 10 மணிக்கு சென்னை சென்டரலிருந்து டெல்லி செல்வதற்கு தினமும் தமிழ்நாடு விரைவு இரயில் தாயராக இருக்கிறது.முன்பதிவு செய்பவர்கள் ஒருமாதம் முன்பே செய்துக் கொள்வது நலம்.
எனது மற்றும் நண்பரின் குடும்பம் குழந்தைகளுடன் ஒன்பது நபர்கள் ஆக்ரா, டெல்லி, ஜெய்பூர் மற்றும் அஜ்மீர் சுற்றுவதற்கு புறப்பட்டோம்.குளிர்சாதன வசதி கொண்ட இரயில் பெட்டியில் முன்பதிவு இணையத்தின் மூலம் செய்திருந்ததால் கணினி அது இஸ்டத்துக்கு இருக்கையை தேர்வுச் செய்திருந்தது.இருக்கையை நம் விருப்பத்திற்கு தேர்வுசெய்யும் வாய்ப்பை இன்னும் இந்திய இரயிவே மக்களுக்கு வழங்கவில்லை என நினைக்கிறேன்.
இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்திருந்ததால் மேல் இருக்கை இரண்டும் ஜன்னலோர இருக்கைகள் மேலும் கீழும் எங்களுக்கு வழங்கி இருந்தார்கள்.
எங்களுடைய வசதிக்கு அமர்வதற்கு பயணிகளிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களும் விட்டுக் கொடுத்து நாங்கள் தந்த இருக்கையில் அமர்ந்து எங்களை சந்தோசப்படுத்தினார்கள்.
விட்டுக்கொடுக்கும் மனோநிலை இந்தியர்களான நம்மிடம் நிறையவே இருக்கிறது. முகந்தெரியாத பழக்கமே இல்லாதவர்களுக்கு நாம் விட்டுக் கொடுத்து அவர்களை சந்தோசப்படுத்துகிறோம் அதுவே நம் குடும்பத்தார்களுக்கு நம்மை விட்டுக் கொடுத்தால் நம்வாழ்க்கை அளவிலா ஆனந்தத்தை அடையும் என்பதை நாம் தெரிந்திருந்தாலும் மனம் ஈகோ என்ற கவசத்தை தலையில் மாட்டிக்கொண்டு கழட்டத்தெரியாமல் திணருகிறோம் என்பதானே உண்மை.
எங்கள் பயணம் இனிமையாக அமைவதற்கு இரயில் பயண இருக்கைள் எங்களின் விருப்பத்திற்கு மாற்றிக் கொண்டதால் குழந்தைகள் குதுகூலம் அடைந்தார்கள்.
முதலில் நாங்கள் சுற்றவேண்டிய இடம் ஆக்ரா என தீர்மானித்தோம். சென்னையிலிருந்து ஆக்ராவிற்கு சுமார் 1980 கி.மீ தூரம். இரு இரவுகள் ஒரு பகல் இரயில் பயணம். இரயிலில் தலையாணை போர்வை மற்றும் மெத்தை விரிப்பு இவைகளை முதல் இரண்டாம் மூன்றாம் வகுப்பு குளிர் பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு தருகிறார்கள் சுகமாக தூங்கலாம்.
நம் வீட்டில் கூட இவ்வளவு நேரம் தூங்க மாட்டோம் ஒய்வு எடுக்கமாட்டோம் ஆனால் நெடுந்தூர இரயில் பயணத்தில் நமக்கு கிடைக்க கூடிய ஒய்வு அலாதியானது அனுபவிக்க வேண்டியது.வாய்ப்பு கிடைக்கக் கூடியவர்கள் அதை அனுபவிப்பார்கள்.
நெடுந்தூர இரயில்பயணத்தில் பயணிகளுக்கு உணவு குழந்தைகளுக்கான உணவு இவைகள் அனைத்தும் இரயிலில் ஒரு பெட்டியில் அடுப்பங்கறையை உருவாக்கி அதில் சமைத்து சூடாக வழங்குகிறார்கள்.டீ காபி குளிர்பானங்கள் நொறுக்கு தீணிகள் விற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.
இரயில் செல்லும் பாதையில் நகரம் கிராமம் மலை என்று இயற்கையின் பன்முகங்களை கண்டு இரசிக்க முடிகிறது. சென்னையிலிருந்து ஆக்ரா செல்வதற்கு நான்கு மாநிலங்களை கடக்கவேண்டி இருக்கிறது.
இந்த நான்கு மாநிலங்களின் சீதோசனத்தை நம்மால் கண்டு இரசிக்க இயலுகிறது வெப்பத்தையும், மழையையும், மிதமான குளிரையும் அனுபவிக்க முடிகிறது.
இரயில் நிறுத்தும் இடங்களில் அந்தந்த ஊர்களின் பெயர்பெற்ற திண்பன்டங்கள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்கிறார்கள். விலையை மட்டும் நாம்தான் தீர்மானிக்கனும் சொன்ன விலையில் எதையும் வாங்கக் கூடாது விற்கக்கூடியவர்களும் அப்படிதான் விலையை நிர்ணயிக்கிறார்கள்.
நெடுந்தூரப் பயணத்திற்கு இரயில் சுமார் 24 பெட்டிகளை கோர்த்து செல்வதினால் 1 கி.மீ தூரத்திற்கு இரயில் நிற்பதைப்போன்ற பிரம்மை தோன்றுகிறது. ஓரு நிறுத்தத்தில் நின்றால் குளிர் சாதனப்பெட்டி நிறுத்தத்தின் கடைசியில் தான் நிற்கிறது அதனால் கடைகளில் ஏதும் பொருட்கள் வாங்க முடிவதில்லை சில நிமிடங்களில் இரயில் புறப்பட்டு விடுகிறது.
முதல் இரண்டாம் வகுப்புகளில் பாதுகாப்பு இருக்கிறது மற்ற வகுப்புகளில் செல்லக்கூடியவர்கள் உடமைகளில் மிக கவனமாக இருக்கவேண்டும் இருக்கிறார்கள் நீண்ட இரும்பு சங்கலியால் தங்கள் உடைமைகளை பூட்டி வைத்துக் கொள்கிறார்கள்.
பெரிய ஊர்களில் நிறுத்தும்போது தனியார் நிறுவனங்கள் இரயிலின் கழிவறையை நவீன இயந்திரங்களின் மூலம் தூய்மைப்படுத்துகிறார்கள் வரவேற்க்ககூடியது. இது தொடந்து செய்து வந்தால் மக்களுக்கு நன்மையாக இருக்கும்.
நீண்ட தூர பயணமாக இருப்பதால் குளியலறை வசதியும் எல்லா இரயில்களிலும் செய்யப்படவேண்டும் நாங்கள் சென்ற தமிழ்நாடு விரைவு வண்டியில் குளியலறை வசதி இல்லை. இராஸ்தானி விரைவு வண்டியில் இருப்பதாக கூறுகிறார்கள்.
இன்னும் மடி கணினி கைபேசி இவைகளுக்கு மின்சார வசதி (ரீ சார்ஜ் செய்யும் வசதி) செய்திருக்கிறார்கள்.
இரயில் பயணத்தில் நல்ல ஓய்வு கிடைத்தது. நாங்கள் செல்லவேண்டிய ஆக்ரா விடியற்காலை 4.30 மணிக்கு வந்தடைந்தது.எங்களில் யாருமே இதற்கு முன் ஆக்ரா வந்ததில்லை தங்குவதற்கு விடுதியை இணையதளத்தின் மூலம் செய்துக்கொள்ள வசதி இருந்தும் அதை செய்யாமல் அலட்சியப்படுத்தியதால் சில அசவுரியங்கள் ஏற்பட்டது.
ஆக்ரா ஸ்டேசனில் இரயில் நின்றதுமே புரோக்கர்கள் நம்மை சூழ்ந்துக் கொள்கிறார்கள் அவர்கள் அழைத்துச் சென்ற விடுதியில் அறை எடுத்தோம அப்படி எடுக்கும் அறைகளின் விலை சற்று கூடுதலாக இருக்கும் காரணம் புரோக்கர்களுக்கு கமிஷன் நம் வாடகையில் விழும். வந்த புரோக்கர் விடுதியுடன் விட்டபாடில்லை சுற்றிபார்க்க வாகனமும் ஏற்பாடு செய்துதருவதாக கூறி குளிர் சாதன வாகனத்தை தயார்செய்தார்.நாங்கள் செலுத்திய அதற்கான தொகை ஒரு மடங்கு கூடுதல் என்பது பின்னர் விசாரித்ததில் தெரிந்துக் கொண்டோம்.
அதிகாலை 6.00 மணிக்கெல்லாம் விடுதிக்கு வந்து சேர்ந்தோம் அந்த வீதியில் பல விடுதிகள் இருந்தன.
விடுதியின் எதிரில் பெரிய எருமைமாட்டு பண்ணையே இருந்தது.சாலையெல்லாம் எருமையின் சகதி சூழ்ந்து ஈக்கள் மோய்த்து கப் அடித்தது.உலக அதிசய சின்னமான தாஜ்மஹால் இருக்கக் கூடிய ஆக்ராவில் இப்படியா என்று நம்பவே முடியாமல் உ.பி அரசை திட்டிக்கொண்டிருந்தோம்.
8.30 மணிக்கு சுற்றுவதற்கு வாகனம் வந்துவிடும் அதற்குள் தயாராக வேண்டும் குளித்துவிட்டு புறப்பட்டோம்.
எங்கள் எல்லோர் மனதிலும் முதலில் தாஜ்மஹாலை காணவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.ஆனால் வாகன ஓட்டுனரோ ஃபத்தேபூர் சிக்ரி(அக்பர் கோட்டைக்கு) தான் முதலில் அழைத்துச் செல்வேன் என அடம்பிடித்தார். சரி அவருடைய விருப்பத்திற்கு விட்டோம் அக்பர் கோட்டை ஆக்ரா நகரத்திலிருந்து 45 கி.மீ தொலைவில் இருக்கிறது.மதியம் 3.00 சுமாருக்கு தாஜ்மஹாலில் விடுகிறேன் என்றார்.
நாங்கள் சென்றநேரம் வெயில் அனலை கக்கியது அந்த கொடுர வெப்பத்தில் நன்றாக நனைந்தோம்...எங்கள் சிறுசுகளெல்லாம் வெப்பத்தில் குளித்தனர்.
எங்கள் வாகனம் ஆக்ரா நகரத்தினுல் நுழைந்தது எருமைமாடுகள் நகரத்தை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது உ.பி அரசுக்கு எருமைகள் மீது தனி பாசங்காட்டி முழு சுதந்திரம் அளித்திருப்பார்கள் என நினைக்கத் தோன்றியது நகரில் எங்கு திரும்பினாலும் எருமைகள் மாநாடுதான். வாகன நெரிசலைவிட எருமைகளின் நெரிசல் அதிகம் காணப்பட்டன.
நகரில் ஒரு இடத்தில் கழுதைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படும் என பலகையும் வைக்கப்பட்டிருந்தது.கழுதையின் முதுகில் இருபக்கமும் பெரிய பைகளைப்போல் அமைத்து அதில் செங்கற்களை நுழைத்துக் கொண்டிருந்தார்கள்.
நாம் எந்த யுகத்தில் இருக்கிறோம் என்பதே ஒரு கணம் யோசிக்க வைத்தது.நம் ஊர் மினி பஸ்களைப் போல் அங்கும் கிராமங்களுக்கு செல்லக் கூடிய வாகனங்கள் இருந்தன ஆனால் பேருந்துக்குள் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ பெரும்பாலோர் பேருந்துக்கு மேல் அமர்ந்து பயணம் செய்யவே ஆர்வப்படுகிறார்கள். பெரும்பாலன வாகனங்களில் மேல் தளங்களில் அமர்ந்தே பயணம் செய்கிறார்கள்.விவசாய நிலங்கள் அதிகமாக வரண்டே இருந்தது மழையை நம்பிதான் வாழ்கிறார்கள்.
ஏழைகளின் கடினமான உழைப்பை அவர்களின் கஸ்டங்களை வடமாநிலங்களில் பார்க்கமுடிந்தது...எங்கள் சுற்றுலா இடங்களை மட்டும் பார்ப்பதற்கல்ல மனிதர்களையும் தான்...நீண்டுவிட்டது தொடர்வோம்....
17 comments:
ஆரம்பமே ஆர்வத்தைத் தூண்டுகிறது.
அறிமுக ஆரம்பம், தொடர்ந்து படிக்க
ஆவலுடன் உள்ளேன்.
தென்மாநில சுற்றுலா or வடமாநில சுற்றுலா ????
வடமாநிலம்....சுட்டிக்காட்டிய நண்பருக்கு நன்றி
படிக்கும் போது நானும் பயணம் செல்வது போல் இருக்கின்றது.
//முகந்தெரியாத பழக்கமே இல்லாதவர்களுக்கு நாம் விட்டுக் கொடுத்து அவர்களை சந்தோசப்படுத்துகிறோம் அதுவே நம் குடும்பத்தார்களுக்கு நம்மை விட்டுக் கொடுத்தால் நம்வாழ்க்கை அளவிலா ஆனந்தத்தை அடையும் என்பதை நாம் தெரிந்திருந்தாலும் மனம் ஈகோ என்ற கவசத்தை தலையில் மாட்டிக்கொண்டு கழட்டத்தெரியாமல் திணருகிறோம் என்பதானே உண்மை.//
அப்ப இது வெறும் பயனக்கட்டுரையாக மட்டும் இருக்காது என்று நினைக்கின்றேன்.
//Anbucr said...
தென்மாநில சுற்றுலா or வடமாநில சுற்றுலா ???? //
அதே சந்தேகம்தான் எனக்கும்...
அண்ணே...முதல்ல எழுத்துருவின் நிறத்தை மாத்துங்க படிக்கிறதுக்குள்ள இருக்குற பார்வையும் போய்டும்போல இருக்கு...வெள்ளைநிறத்தில் எழுத்துருவை மாத்துங்க இன்னொரு வாட்டி படிக்கனும்...
அப்புறம் அங்க இணைப்புல தென்மாநில சுற்றுலான்னு கொடூத்துட்டு இங்க வடமாநில சுற்றுலா பதிவை போட்டுருக்கீங்க....
மன்னிக்க...பிழை ஏற்பட்டுவிட்டது....எழுத்துருவையும் மாற்றியாச்சு.........நன்றி
நல்ல படங்கள் அருமையான அனுபவ கட்டுரை
கொடுத்து வைத்த பிள்ளைகள்.
பெண் பிள்ளை இல்லாதவன் வாழ்க்கை வீண் .
துவக்கமே களை கட்டுகிறது. தொடருங்கள்.
சத்தேபுர் சிஹ்ரி - ஃபத்தேபூர் சிக்ரி (Fatehpur Sikri) என நினைக்கிறேன்.
சூப்பரா ஆரம்பிச்சு என்னையும் உங்களோட கூப்பிட்டுக்கிட்டு போறீங்க. சுவையான பயணம்.
நிஜாம் மற்றும் அப்துல்பாஸித் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வருகைத்தந்த அமீரகப்பதிவர்கள் அனைவருக்கும் நன்றி...பிழைகளை சரி செய்துக் கொண்டேன்...
தமிழ்மணத்தில் இன்னமும் தென் மாநில சுற்றுலா என்று உள்ளது, அதனால் தான் ஓடோடி வந்தேன். வட மாநில சுற்றுலா என்றதும் என் படிக்கும் வேகம் குறைந்து, முதல் பாரா, புகைப்படம், கடைசி பார மட்டும் படித்தேன்.
ரயிலில் நாங்களும் உடன் வருவது போலவே இருக்கிறது. ஆக்ராவின் அவலங்கள் அழகாக சொல்லப் பட்டிருக்கிறது.. தொடருங்கள் வருகிறோம்.
பாய், பெண் குழந்தைகளின் படங்களைத் தவிர்க்கலாமே?? இணையத்தில் இருக்கும் சில சைக்கோக்களின் செய்கை மூத்த பதிவரான நீங்கள் அறியாததா???
ராம்ஜி_யாஹூ உங்களுக்காகவேண்டி தென்மாநில சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்கிறேன்...
வித்யா சுப்ரமணியன்....உங்களைப்போன்றவர்களின் சுற்றுலாவிற்கு முன் இதுவெல்லாம் சாதாரணம் என்றே தோனுகிறது...உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எம்.எம்.அப்துல்லாஹ்...சகோதரரே உங்கள் ஆலோசனைக்கு நன்றி இனி தவிர்த்துக்கொள்கிறேன்...
அண்ணே கூடவே வரும் உணர்வு, இந்த பதிவை படித்தால் நாம் செல்லும்போது இலகுவாக இருக்கும் என்று நின்னைக்கிறேன். தொடருங்கள்
நல்ல பயண அனுபவம், தொடருங்கள் ....
நீங்க எழுதறத பாத்தா...ஆக்ரா பயணத்துக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று பட்டியல் போட வசதியாக இருக்கும் போலே.
1. தமிழ்நாடு எக்ஸ்பிரசில் போகக்கூடாது. இராஜதானியில்தான் போக வேண்டும். சாப்பாடு டிபன் நொறுக்குத் தீனி - எல்லாமே டிக்கட்டோட சேத்தி. ட்ரையினை விட்டு இறங்கவே வேண்டாம். உடமைகளுக்கும் பசங்களுக்கும் நல்ல பாதுகாப்பு.
2. முன்னாடியே ரூம் புக்பண்ணிறனும் - transfer from station to hotel and back - என்று. அவர்களே தாஜ்ம்ஹாலு கூட்டிசென்று விடுவார்கள்.
ஆனால் பயணக்கட்டுரை சுவாராசியமா இருக்காது, இப்படி பஸ்லே எப்படி போறாங்க.. எருமை மாடுகளின் ஆக்கிரமப்பப்பத்தியெல்லாம் எழுதமுடியாது. Climate change யை எல்லாம் enjoy/experience பண்ண முடியாது.
A good traveloge has both positive and negative items to tell us. You are doing that well !
Ok..கிளியனூர் எங்கே இருக்கிறது தமிழ்நாட்டில் ? எனக்குத் தமிழ்நாட்டைப்பத்தி சரியாத்தெரியாது. Excuse me!
Post a Comment
படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....