உங்கள் வருகைக்கு நன்றி...

Monday, February 20, 2012

மின்னுவதெல்லாம் நட்சத்திரமல்ல!இந்த வாரத்தின் நட்சத்திரப் பதிவராக இருப்பதற்கு தேர்வு செய்த தமிழ்மணத்திற்கு மனமார்ந்த நன்றியுடன்…

தமிழ்மணம் உறவு சுமார் மூன்றாண்டுகளைக் கடந்தது.
அங்கு கற்றுக் கொண்டது கொஞ்சம் கற்க வேண்டியது மிச்சம்.
நான்கு ஆண்டு காலமாக வலைதளத்தை சுற்றி வருகிறேன். சாலையைப் போல எத்தனையோ மேடுப் பள்ளங்கள்.
அறிவுமிருக்கிறது அழிவுமிருக்கிறது, கற்றுக் கொள்வதற்கும், கற்க கூடாததற்கும் ஒரே இடம் இணையதளம்.

யாருக்கு எது தேவையோ அது கிடைக்கிறது. குடுமிபிடி சண்டையும் குழாயடி சண்டையும் தெருக்களில் மட்டுமல்ல வலைகளில் வளைகுடா போரைப் போல அவ்வபோது காணமுடிகிறது.

பேனா நண்பர்கள் மறைந்து இன்று வலைதள நண்பர்கள் மிகைத்தமைக்கு தமிழ்மணம் போன்ற இணையதளங்கள் பாலமாக இருப்பதே காரணம் என்று சொல்லலாம்.

பல நண்பர்களை இந்த இணையதளம் எனக்கு கொடுத்திருக்கிறது. அவர்களிடம் பழகுவதற்கு தினம் என்னைப் படித்துக் கொண்டிருக்கிறேன் தேர்வுகளில் “நான்” தோற்றுப்போய் விடுவதற்காக…

அமீரகத்தில் வாழும் தமிழன்பர்கள் பலர் பதிவு எழுதினார்கள் அவர்களுடைய பதிவுகள் என்னை ஊக்கப்படுத்தி இருக்கிறது.
பதிவர்கள் சந்திப்பின் மூலம் அறிமுகங்கலாகி பதிவர் சுற்றுலா, குறும்படம் என்று கலக்கிய அமீரகப்பதிவர்களின் நட்பின் வரலாறு சுவாரஸ்யமானது.

சத்திரத்தில் சித்திரம் சமைத்தோம், நோன்பில் இஃப்தார் படைத்தோம், பிரியமுடன் பிரியாணி சுவைத்தோம், விழாக்களில் விலகிய நாட்களை எண்ணி வருந்தினோம்,
ஆனால் தற்போது அமீரகப்பதிவர்களின் சிலருடைய பக்கங்கள் வெண்மையாகவே இருக்கிறது.
பதிவர்களின் சந்திப்பு என்பது அமீரகத்தை பொருத்தவரையில் இன்னொரு கல்லூரி அனுபவம்போல் என்றாலும் நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள் நிறைய இருப்பதினால் நன்றாக சிரிக்க முடிகிறது சந்திப்பு என்னவோ மொக்கைதான்.

விஞ்ஞானத்தின் மீதும் மெய்ஞ்ஞானத்தின் மீதும் ஆர்வம் கொண்ட நிலாமலர்கள் என்ற பெயரில் பதிவு எழுதும் நண்பர் நாசர் சொன்னார் தரமான பதிவுகளுக்கு ஓட்டுகள் கிடைப்பதில்லையே மொக்கைப் பதிவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்றார்…

உண்மைதான் அது படிப்பவர்களைப் பொருத்திருக்கிறது… தரம் என்று நாம் நினைப்பது சிலருக்கு மொக்கையாக இருக்கலாம் மொக்கை என்று நாம் நினைப்பது சிலருக்கு தரமானதாக இருக்கலாம். படிப்பவரின் தேடலைப் பொருத்தே பின்னூட்டமும் ஓட்டளிப்பும் நடைபெறுகிறது.

நூறு பேர்கள் படித்துவிட்டு ஐந்து பேர்கள் பின்னூட்டமும் ஒருவர் மட்டும் ஓட்டும் அளித்துவிட்டு அல்லது எதுவுமில்லாமல் செல்லலாம்…

எதிர்பார்ப்பு இல்லாமல் எழுதினால் நம்மை எதுவும் கைது செய்யமுடியாது. சுதந்திரமான எண்ணம்தான் உண்மைகளை எழுத முடியும்.  

எனது வலைதளத்திற்கு புதிதாக வந்த அன்பர்களுக்கு

அதிகமாக பயணக்கட்டுரைகளை எழுதியிருக்கிறேன் மற்றும் அமீரக அனுபவங்களையும் எழுதியுள்ளேன் படித்துப்பாருங்கள்.
தங்கத்தைப் பற்றிய பதிவுமிருக்கிறது அது உங்களுக்கு தேவையான செய்திகளை தரக்கூடியதாக இருக்கலாம். எனது பதிவுகளுக்கு காலாவதி தேதி கிடையாது.  

இந்த ஒரு வாரக்காலத்திற்கு தினம் ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது முடிந்தவரையில் முயற்சிக்கிறேன்  

நன்றி!

28 comments:

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் பாய்.

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி கோவி.கண்ணன்

nagoreismail said...

நட்சத்திரத்தை நட்சத்திரமாக கண்டுகொண்டதற்கு தமிழ்மணத்திற்கு வாழ்த்துகள்

அது ஒரு கனாக் காலம் said...

வாழ்த்துக்கள் கிஸ்மத் பாய் ...நட்சித்திர வாழ்த்துக்கள்

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி நாகூர் இஸ்மாயில்

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி அது ஒரு கனாக் காலம்

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள். அமீரகப் பதிவர்கள் வலைப்பூவை வாடவிட்டது வருத்தமான விஷயமே. மற்ற தளங்களில் பிஸியாகிவிட்டார்கள் போல.

Barari said...

வாழ்த்துக்கள் இஸ்மத் .தங்கத்தை பற்றிய தங்கள் கட்டுரை மிக பயனுள்ளதாக இருந்தது

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி ஹுஸைனம்மா

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி பராரி

Sankar Gurusamy said...

வாழ்த்துக்கள்.. தங்களின் பதிவுகள் எல்லாமே சத்தானவை... தொடர்ந்து எழுதுங்கள்..

http://anubhudhi.blogspot.in/

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி சங்கர் குருசாமி

ஸாதிகா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சகோ.

நான்கு ஆண்டு காலமாக வலைதளத்தை சுற்றி வருகிறேன். சாலையைப் போல எத்தனையோ மேடுப் பள்ளங்கள்.
அறிவுமிருக்கிறது அழிவுமிருக்கிறது, கற்றுக் கொள்வதற்கும், கற்க கூடாததற்கும் ஒரே இடம் இணையதளம்.
///

உண்மை வரிகள்.

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி ஸாதிகா

சசிகலா said...

முதன் முதலாக தங்கள் பதிவைப் பார்க்க முடிந்தது எதிர்பார்ப்பு இல்லாமல் எழுதினால் நம்மை எதுவும் கைது செய்யமுடியாது. சுதந்திரமான எண்ணம்தான் உண்மைகளை எழுத முடியும். .
அறுபுதமான தங்கள் கருத்துக்களை கண்டு மகிழ்ந்தேன் .

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி துபாய் ராஜா

துளசி கோபால் said...

நட்சத்திரத்துக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

//எதிர்பார்ப்பு இல்லாமல் எழுதினால் நம்மை எதுவும் கைது செய்யமுடியாது.//

உண்மை. மனசுக்குச் சரின்னு பட்டதைச் சொல்லத்தானே வலை பதியறோம்.

அமைதிச்சாரல் said...

//எதிர்பார்ப்பு இல்லாமல் எழுதினால் நம்மை எதுவும் கைது செய்யமுடியாது. சுதந்திரமான எண்ணம்தான் உண்மைகளை எழுத முடியும்.//

ரொம்பவே சரியாச் சொன்னீங்க.

நட்சத்திர வழ்த்துகள்>

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி துளசி கோபால்

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி அமைதிச்சாரல்

சுல்தான் said...

நட்சத்திர வாழ்த்துகள் இஸ்மத் பாய்

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி சுல்தான் பாய்

Rishvan said...

நட்சத்திர வாழ்த்துகள்... www.rishvan.com

கிளியனூர் இஸ்மத் said...

நன்றி ரிஷ்வன்

ஒ.நூருல் அமீன் said...

வாழ்த்துகள்....

எனக்கு நானே தேர்தெடுக்கப்பட்டது போல் மகிழ்சியுண்டானது. உண்மையும் அது தானே.
அதிகமதிகம் எழுதுங்கள் என்ற கோரிக்கையுடன்...

ஒ.நூருல் அமீன் said...

ஓட்டளித்து இன்னுமொருமுறை வாழ்த்துகின்றேன்.

கிளியனூர் இஸ்மத் said...

ஒ.நூருல் அமீன் அவர்களுக்கு உங்கள் வாழ்த்தும் ஓட்டளிப்பும் மகிழ்ச்சியை உண்டாக்கியது

Post a Comment

படித்தது பிடித்ததா...?
அல்லது கடித்ததா...?
கருத்தை சொல்லலாம் தானே
சொல்லுங்க....